ராஜபாளையம் | தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் சோதனை - லஞ்ச பணத்தோடு உதவியாளர் தப்பினார் https://ift.tt/Cxegdu7
ராஜபாளையம்: ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு உதவியாளர் தப்பி ஓடிய நிலையில் தொழிலாளர் நல ஆய்வாளர் முருகன்(57) மீது வழக்கு பதிவு செய்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆய்வாளராக இருப்பவர் முருகன்(57). அங்கு துப்புரவு பணியாளராக இருக்கும் மாயப்பெருமாள்(50) என்பவர் ஆய்வாளரின் உதவியாளர் போல் செயல்பட்டு வந்தார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எழும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி ஆய்வாளர் முருகன் ஆய்வு செய்துள்ளார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பணியாளர்களுக்கு ஊதியம் குறைத்து வழங்கியது தெரியவந்தது. ஆய்வு அறிக்கையில் மருத்துவமனை மேலாளரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு முருகன் அலுவலகம் வந்துவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக