மதுரை | கஞ்சாவிற்கு பதில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரிப்பு? - மருந்தாளுநர் உட்பட இருவர் கைது https://ift.tt/VwtxoMi
மதுரை: மதுரை மாநகரை கஞ்சா இல்லாத நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் கஞ்சாவிற்கு பதில் அதிக போதை தரும் மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், காவல் துணை மோகன்ராஜ் மேற்பார்வையில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் சேதுமணிமாதவன் தலைமையிலான தனிப்படையினர் சந்தேகப்படும்படியான இளைஞர்களை கண்காணித்தனர். மதிச்சியம் பகுதியில் டிச., 26ம் தேதி ஆசாரித்தோப்பு சங்கு மகால் அருகே வைகை வடகரை ரோட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை போலீஸார் வழிமறித்தனர். வாகனத்தை நிறுத்திவிட்டு இருவர் தப்பிய நிலையில், ஒருவர் பிடிபட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக