பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் | அனுமதியின்றி திரையிடும் மாணவர்கள் - அரசியல் ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள் https://ift.tt/fBOcmzu
புதுடெல்லி: பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) நேற்று முன்தினம் இரவு 9.00 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிட இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அயிஷா கோஷ் அறிவித்தார். இதற்கு பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக