பிரதமர் மோடியுடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு - இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க ஆர்வம் https://ift.tt/q23oyJk
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர். படம்: பிடிஐசர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவா நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை ஏடிபி தலைவர் மசட்சுகு அசகாவா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு ஏடிபியின் உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக