இமாச்சலில் சுற்றுலாவை மேம்படுத்த 8 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு https://ift.tt/6g7LboD

ஹமிர்புர்: சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடப்பாண்டில் 5 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் (ஹெலிபோர்ட்ஸ்) அமைக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: இமாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள 5 ஹெலிபோர்ட்களில் மூன்று வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு போதுமான ஹெலிபோர்ட்ஸ் வசதி மாநிலத்தில் இல்லை. இதனை உணர்ந்து சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மேலும் 8 ஹெலிபோர்ட்களை அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த ஹெலிபோர்ட்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD