மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் - சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு https://ift.tt/9OW6foK
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டம் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாவட்ட ஆயுத போலீஸ் படை (டிஆர்ஜி) போலீஸார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அரண்பூர் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த ஐஇடி வகை கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், 10 போலீஸார், வாடகை வேனின் ஓட்டுநர் உயிரிழந்தனர். இந்த கண்ணிவெடி தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக