இன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பு https://ift.tt/G7Y9Reb
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை வானொலியில் ஒலிபரப்பாகிறது. நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம்நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அகில இந்தியவானொலி மற்றும் தூர்தர்ஷன் மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் முதல் முறையாக உரையாற்றினார். அப்போதுமுதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக