சைபர் குற்றங்களுக்கான தலைமையிடமாக விளங்கும் ஹரியாணா நூஹ் மாவட்டத்தில் 300 இடங்களில் 5,000 போலீஸார் தீவிர சோதனை: 125 குற்றவாளிகள் கைது https://ift.tt/UYPa2Jj
நூஹ்: ஹரியாணா மாநிலத்தில் உள்ள நூஹ், ராஜஸ்தானில் பாரத்பூர், உத்தரப் பிரதேசத்தில் மதுரா ஆகிய நகரங்களை இணைக்கும் எல்லைப் பகுதி சமீப ஆண்டுகளில் சைபர் குற்றச் செயல்களுக்கான தலைமையிடமாக மாறியுள்ளது. இப்பகுதியுள்ள சிறிய கிராமங்களில் முகாமிட்டு கணினி மற்றும் இணைய வசதியைப் பயன்படுத்தி சைபர் குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
மொபைல் எண்ணுக்கு போலி மெசேஜ் அனுப்பி அதன் மூலம் பணம் அபகரித்தல், ஜி பே, போன்பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு போலி இணைப்புகளை அனுப்பி அதன் மூலம் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் திருடுதல், ஏடிஎம் கார்டு மோசடி, சிம் கார்டு மோசடி என விதவிதமான சைபர் குற்றங்கள் இந்தப் பிராந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு நடத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக