கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் 73 ஆக உயர்வு - 212 பேர் மாயம்
மாலிண்டி: கென்யாவில் பாதிரியார் ஒருவரின் போதனையை நம்பி பட்டினி கிடந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மேக்கன்ஜி நெதாங்கே. இவர் தனது போதனையின் போது, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள்தான் கடவுளின் தொண்டர்கள் என கூறியுள்ளார். இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளனர். இவர்கள் எல்லாம் அருகில் உள்ள காடுகளில் மொத்தமாக புதைக்கப்பட்டுள்ளனர். சிலரது உடல்கள் புதைக்கப்படாமலேயே கிடந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக