பாக். மீது அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு: கோவாவில் பிலாவல் புட்டோவுடன் இருதரப்பு பேச்சுக்கு வாய்ப்பில்லை https://ift.tt/xPGbgh8

புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிக்கலானது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதால், கோவாவில் அடுத்தவாரம் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் கோவாவில் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராக உள்ளதால், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்திருந்தார். இதை ஏற்று பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

கேரளாவில் 'கொட்டிக்கலசம்' தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம் அதிரடி https://ift.tt/39zbjtJ