பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சி - பிரதமர் மோடியிடம் 9 கேள்விக்கு பதில் கோருகிறது காங்கிரஸ் https://ift.tt/UvXBQya
புதுடெல்லி: பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தாங்கள் கேட்கும் 9 கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று மே 30-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரிடம் 9 கேள்விகளை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக