"ரஷய ரததம சநதவத தவரகக..." - பதனகக எதரக பனவஙகவதக அறவததத வகனர ஆயதக கழ
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது.
போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், "ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக