பரதமர வலயறததம பத சவல சடடததகக மஸலம தனநபர சடட வரயம எதரபப - ஆம ஆதம கடச ஆதரவ https://ift.tt/GjcUgmp
புதுடெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டுஉள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக