அமெரிக்காவில் பசியால் வாடும் ஹைதராபாத் மாணவி: மகளை மீட்க அமைச்சருக்கு தாய் கடிதம்
ஹைதராபாத்: அமெரிக்காவில் மேற்படிப்புக்கு சென்ற மகள், கடந்த 2 மாதங்களாக பசியால் வாடி தெருவில் சுற்றி திரிவதாகவும் அவரை மீட்டுத் தருமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தாய் கடிதம் எழுதியுள்ளார்.
ஹைதராபாத் மவுலாலி பகுதியை சேர்ந்தவர் சையிதா ஹவாஜ் பாத்திமா. இவரது மகளான சையிதா லுலூ மின்ஹாஜ் குவைதி எம்.எஸ். படிக்க 2021 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்கு சென்றார். அங்கிருந்து தினமும் தனது தாயிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். லுலூ கடந்த 2 மாதங்களாக தாயை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் கவலை அடைந்த பாத்திமா, தனக்கு தெரிந்த சிலரிடம் அமெரிக்கா சென்று தனது மகள் குறித்து விவரங்களை அறியுமாறு கேட்டுக் கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக