சர்வதேச அளவில் இஸ்ரோவின் அந்தஸ்தை உயர்த்திய சந்திரயான்-3: திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெருமிதம் https://ift.tt/BFGPbnU
சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரத்தை சேர்ந்தவர்.
சந்திரயான்-3 வெற்றிபயணத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இஸ்ரோ குழுவினருக்கு இதுமகிழ்ச்சியான தருணம். இத்திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியது திருப்தி அளிக்கிறது. திட்டம் தொடக்கம் முதல் தரையிறக்கம் வரை எவ்வித சிக்கலும் இன்றி திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. நிலவில்தரையிறங்கிய 4-வது நாடு, தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெருமையை பெற்றுள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. உலக அளவில் இஸ்ரோவின் மதிப்பு, அந்தஸ்தை சந்திரயான்-3 திட்டம் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக