சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் நிலவில் தரையிறக்கும் பணி தொடக்கம் https://ift.tt/qv4CNpK
புதுடெல்லி: சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரில் இருந்து ரோவர் பிரக்யான் வெளியேறியது. ரோவர் தரையிறங்கும் பணி இரவு 10 மணியளவில் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் மாலை 6:04 மணியளவில் நிலவில் தரை இறங்கியது. இச்சாதனை நிகழ்வை பல்வேறு தரப்பினரும் தொலைக்காட்சிகளிலும், செல்போன்களிலும் கண்டு மகிழ்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக