மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: பிரதமர் மோடி https://ift.tt/s9ATyNC
புதுடெல்லி: வறுமையை ஒழிக்கும் நோக்கில், ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை இந்திய அரசு கடைபிடிப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று ஜி20 அமைப்பின் வர்த்தக அமைப்பான பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 நாடுகளின் வர்த்தக அமைப்பான ‘பிசினஸ் 20’ (பி20) அமைப்பு கடந்த 2010-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜி20 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் பங்கேற்கின்றன. டெல்லியில் பி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஜி20 அமைப்பில் சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் பி20 அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக