நிலவில் ஆய்வு தொடங்கியது ரோவர் - அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறது என இஸ்ரோ தகவல் https://ift.tt/8jXJS3f
சென்னை: நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 லேண்டர், ரோவர் கலன்கள் ஆய்வுப் பணிகளை தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்டமாக, 41 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் சாதனையை இந்தியா படைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக