நிலவின் தென்துருவத்தில் கந்தகம் இருப்பதை உறுதி செய்த ரோவர்: இஸ்ரோ https://ift.tt/cEFAPTZ
அகமதாபாத்: நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் கந்தகம் (சல்ஃபர்) இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி தென்துருவத்தில் தரையிறங்கியது. பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து வருகின்றன. செப்டம்பர் 3-ம் தேதி வரை லேண்டரும் ரோவரும் ஆய்வு பணியில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக