பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் புகைப்படம்: ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு

பாரிஸ்: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும்.

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம்காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன் தென் திசையில் பயணிக்கிறது’’ என்றுதெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD