ஆந்திராவில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து: 6 பேர் பலி; 15+ காயம் https://ift.tt/HtnV9Wh
கண்டகப்பள்ளி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 08504) மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற ரயில் (வண்டி எண் 08532) மோதிய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. கேபிள் பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக