கேரளாவின் கொச்சி அடுத்த களமசேரியில் பயங்கரம்: கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு https://ift.tt/T3okjHm
கொச்சி: கேரளாவின் கொச்சி அடுத்த களமசேரியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அடுத்த களமசேரியில் சாம்ரா சர்வதேச மையம் உள்ளது. இங்கு, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள்’ சபை சார்பில் 3 நாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 27, 28-ம் தேதிகளில் காலை முதல்மாலை வரை நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவு நாளானநேற்று 2,400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக