உத்தராகண்ட் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர்: கேமரா முன்பு பேசும் காட்சி வெளியாகியுள்ளது https://ift.tt/IqL03W7
உத்தரகாசி: உத்தராகண்டில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான முதல் வீடியோ வெளியாகியுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 கி.மீ. சுரங்கப் பாதை அமைக்கும்பணி நடந்து வந்தது. அங்கு கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்ட நிலையில்,சுரங்கப் பாதைக்குள் வேலை செய்துகொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக