நான் வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்வேன்: சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் கருத்து https://ift.tt/Busxp7t
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்ல உள்ளேன் என சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 12-ம் தேதி திடீரென மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்காக, சர்வதேச சுரங்க நிபுணரும் ஆஸ்திரேலிய பேராசியருமான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கேயே தங்கியிருந்து மீட்புக் குழுவுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக