“என்றும் உங்கள் பக்கம் நிற்போம்” - இந்திய அணிக்கு பிரதமர் மோடி ட்வீட் https://ift.tt/CM0QrxB

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் இந்திய அணிக்கு எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய அணி முதலில் பேட் செய்து 240 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அரைசதம் கடந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தும் ஹெட் மற்றும் லபுஷேன் இணைந்து 192 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது அந்த அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதன் மூலம் ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD