சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவை ரத்து செய்க: எம்.பி டி.ரவிகுமார் https://ift.tt/St9T6xE
புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ரவிகுமார் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 1965-ல் மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து இன்று (டிச.20, புதன்கிழமை) நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-இன் கீழ் பின்வரும் கோரிக்கையை திமுகவின் எம்பியான டி.ரவிக்குமார் பேசியதாவது: கடந்த பிப்ரவரி 9, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர், ‘உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தொடர்பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவேண்டும்’ என கடந்த மே 21, 1965 அன்று அமைச்சரவைக் குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக