ஏடன் வளைகுடாவில் 9 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் https://ift.tt/o23ktZj
புதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு சென்ற சரக்கு கப்பல் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்து, இந்திய கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடியாக உதவிக்கு சென்றது.
அரபிக் கடல், ஏடன் வளைகுடா, பெர்ஷியன் வளைகுடா, செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் சமீபகாலமாக டிரோன் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இந்த தாக்குதலில் ஹவுதி தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். இஸ்ரேலுக்கு செல்லும் அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ட்ரோன் தாக்குதல் மற்றும் கடற் கொள்ளையர்களை தடுக்கும் பணியில் இந்திய போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கடத்தப்பட்ட மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட பல கப்பல்களை இந்திய கடற்படை கப்பல்கள் மீட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக