திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு https://ift.tt/Q5xGlZA
அமராவதி: திறன்மேம்பாடு திட்ட நிதி முறைகேடு வழக்கில், ஒரு முன்னாள் முதல்வரான என்னை கைது செய்ய 17-ஏ சட்டப்பிரிவின் படி, ஆளுநருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திடீரென சிஐடி போலீஸார் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தது சட்டப்படி செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்பில் கடந்தஆண்டு செப்டம்பர் 23ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு இதே வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக