ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது https://ift.tt/7jwCHpE
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக