தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தல்
பாரிஸ்: பிரான்ஸ் தேசிய கொடி குறித்துஅவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) மஹ்ஜூப் மஹ்ஜூபி (52), தெற்கு பிரான்ஸின் பக்னோல்ஸ்-சுர்-செஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் மத போதனை செய்துள்ளார். அப்போது, பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக