‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’: கேப்டன் மோகன் ராமின் புதிய புத்தகம் வெளியீடு https://ift.tt/b5mRj4O
சென்னை: கேப்டன் மோகன் ராம் எழுதிய ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ (A Captain in Corporate Wonderland) புத்தகம் நேற்றுமுன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது.
கேப்டன் மோகன் ராம் இந்தியகடற்படையில், போர்க் கப்பல்வடிவமைப்பாளராக பணியாற்றியவர். இந்தியாவின் முதல் சொந்த போர்க் கப்பலான ஐஎன்ஸ் கோதாவரி, இவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டதாகும். கடற்படையைத் தொடர்ந்து, முகுந்த் ஸ்டீல் நிறுவனத்தில் அவர் இணைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989-ம் ஆண்டு டிவிஎஸ் சுசூகி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். கடற்படையில் பணியாற்றிவிட்டு, எந்த முன் அனுபவமும் இல்லாத தனியார் துறைக்குமாறி அந்நிறுவனங்களை வளர்த்தெடுத்த அனுபவங்களை ‘கேப்டன் இன் கார்ப்பரேட் வொண்டர்லேண்ட்’ புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக