டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி மார்ச் 31-ல் போராட்டம் https://ift.tt/rIwPt6g
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் வரும் 31-ம்தேதி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2021-22-ம் ஆண்டில் மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்பவர்கள் 12 சதவீதமும், சில்லறை விற்பனையாளர்கள் 185 சதவீதமும் லாபம் ஈட்டும் வகையில் மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சிக்குரூ.100 கோடி லஞ்சம் கிடைத்ததாகவும், இந்த ஊழலில் மூளையாக செயல்பட்டது டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக