ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 32 கட்சி ஆதரவு: குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல் https://ift.tt/NEBerkM
புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின்கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அது முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சில மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக