யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!
சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. அந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தேடி திரிந்த துயரமான நேரம் அது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக