பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ விசாரணை https://ift.tt/0KtHAma
சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். குற்றவாளி தங்கியிருந்த விடுதி, பாழடைந்த கட்டிடம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிப்பிடத்தில் குற்றவாளி தனது தொப்பியை வீசியதும், சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் அந்த தொப்பி வாங்கப்பட்டதும் தெரியவந்தது. அதனடிப்படையில், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த முக்கிய தகவலின்படி, கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அம்மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசாவீர் சாஹிப், அப்துல் மதீன் தாஹா ஆகிய 2 பேர்தான் குண்டு வெடிப்புக்கான காரணம் என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக