பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை https://ift.tt/EBFMN2t
புதுடெல்லி: பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக அறை மேஜை மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான். சூப்பர்மேன் டீ ஷர்ட் அணிந்து காட்சியளித்த அந்த சிறுவன் சினிமா கதாநாயகர்களின் பிரபல வசனங்களைப் பேசியபடி விளையாடினான். அப்போது ஐஏஎஸ்அதிகாரி பமேளா சத்பதி தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்.
இந்த காணொலியுடன் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு: இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பருவகாலம், சிறுவனின் தாயாக ஆனப்பின்னர் உங்களை மிகவும் பயமுறுத்தக்கூடியதாக மாறிப்போகும். அதுதான் கோடை விடுமுறை. இவ்வாறு அவர் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக