ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: பவன் கல்யாண் உட்பட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர் https://ift.tt/dPaKr6N
விஜயவாடா: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உட்பட 23 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் இக்கூட்டணி 21 இடங்களை கைப்பற்றியது. இதுபோல, மொத்தம் உள்ள 175 பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக