கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 120+ பேர் பரிதாப உயிரிழப்பு https://ift.tt/Si52Kao
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடைமழை, வெள்ளம் காரணமாக பல்வேறு சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பல்வேறு குழுவினர் மீட்பு, நிவாரண, மருத்துவப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக