நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் https://ift.tt/71SGEIN
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை தொடர்ந்து 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். புதிய அரசில் நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக