கேரளா, திரிபுராவுக்கு தலா ரூ.15 கோடி: சத்தீஸ்கர் அரசு நிதியுதவி https://ift.tt/RYhzItD
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட திரிபுரா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி வழங்க முதல்வர் தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் முதல்வர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “திரிபுரா மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிரிழப்பு மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக