பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பாலியல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் https://ift.tt/KzX0QWV
ஜல்கான்: மகாராஷ்டிராவில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதி மற்றும் ரூ.5,000 கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 90.86 லட்சம் சுயஉதவி குழுக்கள் செயல்படுகின்றன. இதில் 10.05 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக