2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்வேன்: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு https://ift.tt/3tfJghl
புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார். 49 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்று 3-வது முறையாக கேஜ்ரிவால் முதல்வரானார். இந்த சூழலில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி கேஜ்ரிவால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக