ரூ.2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்: இந்திய கடற்படை திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் https://ift.tt/3R2nyXV
புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரூ.2,500 கோடி செலவில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் இந்திய கடற்படையின் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைசசகம் ஒப்புதலை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பல், எக்ஸ்ட்ரா லார்ஜ் பிரிவில் 100 டன் எடைக்கு மேல் இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக