ஆசியாவில் இந்தியாவின் பலம் அதிகரிப்பு: லோவி இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தகவல் https://ift.tt/aQ8KWpr
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைதலைமையிடமாகக் கொண்டு லோவி இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவில் பொருளாதார ரீதியாக உயர்ந்து இருக்கும் நாடுகளுக்கு லோவி இன்ஸ்டிடியூட் சார்பாக ஆசியா பவர் இன்டெக்ஸ் என்ற ஆய்வை வெளியிட்டு கவுரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடத்தி ஆய்வின்படி, ஆசியாவில் இந்தியாவின் பலம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது. ராணுவத் திறன், ராஜதந்திரம், கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய தரவரிசையில் இந்தியாவை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் வைத்துள் ளது லோவி இன்ஸ்டிடியூட்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக