வாக்குப்பதிவு அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தை வலுவாக்குகிறது காஷ்மீர்: பிரதமர் மோடி பெருமிதம் https://ift.tt/h0lv6Jw
ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர் வலுவாக்கி வருகிறது என்று 2-ம் கட்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்ரீநகர்,கத்ரா பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: “காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதியவரலாறு படைக்கப்பட்டுள்ளது. கிஷ்துவாரில் அதிகபட்சமாக 80 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர்வலுவாக்கி வருகிறது. இதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவில் காஷ்மீர் மக்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக