உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் https://ift.tt/p91a0vY
புதுடெல்லி: பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 114-வது மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது 10 வயதாகி விட்டது. இந்த நிகழ்ச்சியை ஓர் இயக்கமாக மாற்றிய மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக