நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் ‘நமோ பாரத்’ விரைவு மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://ift.tt/V0IE9XZ
அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: மத்தியில் தொடர்ச்சியாக 3-வது முறை பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்படும் நமோ பாரத் ரேபிட் ரயில் திட்டத்தால், ஒருநகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்ல முடியும். முதல்கட்டமாக அகமதாபாத் - புஜ் இடையே இந்த ரயில்சேவை தொடங்கப்படுகிறது. படிப்படியாக நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக