3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நண்பனை சிக்கவைக்க திட்டமிட்ட சத்தீஸ்கர் சிறுவன் கைது https://ift.tt/vkW4Ub8
ராய்ப்பூர்: மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரைச் சேர்ந்த சிறுவனை மும்பை போலீஸார் கைது செய்தனர். நண்பன் பெயரில் போலி கணக்கு தொடங்கி அந்த சிறுவன் இந்த மிரட்டல்களை விடுத்தது தெரியவந்தது.
கடந்த திங்கள் கிழமை (அக்.14) அன்று எக்ஸ் சமூகவலைதள கணக்கு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு ஏர்லைன்களுக்கு சொந்தமான மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அந்த பக்கத்தில் பலரும் மும்பை போலீஸாரை டேக் செய்து கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த மிரட்டல்கள் காரணமாக இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதில் மும்பையில் இருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக