ஜார்க்கண்டில் கார் டயரில் மறைத்து ரூ.50 லட்சம் கடத்தல்: வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் https://ift.tt/fGYEaC9
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20-ல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஓட்டுக்கு பணப்படுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிரிஹத் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் - பிஹார் எல்லையில் வருமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் உபரியாக இருந்த டயரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டயரை கிழித்து அந்தப் பணக்கட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். 11 கட்டுகளில் மொத்தம் ரூ.50லட்சம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக