70 வயது முதியவர்களுக்கான ஆயுஷ்மான் காப்பீடுக்கு 5 லட்சம் பேர் முன்பதிவு https://ift.tt/1M4iUIP
புதுடெல்லி: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்ததது. இந்த காப்பீட்டு அட்டை வேண்டி இதுவரை 5 லட்சம் பேர் தங்களது விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 1.66 லட்சம் முதியவர்கள் ஆயுஷ்மான் காப்பீடு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளா உள்ளது. இம்மாநிலத்திலிருந்து 1.28 லட்சம் பேர் காப்பீடு அட்டை கோரி பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடரந்து, உத்தர பிரதேசத்திலிருந்து 69,044, குஜராத்திலிருந்து 25,491 முதியவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக